search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு- நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி மக்கள் தொடர்பாளர் உதயகுமார் தனது கட்சியினருடன் கலெக்டர் அலுவலத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரை சேர்ந்த சத்தியபிரபு என்பவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை அவதூறாக பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சத்தியபிரபு மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

    எனவே அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான புகார் மனு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×