search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டியில் வாரச்சந்தை தொடங்கிய நிலையில் மும்முரமாக வியாபாரம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    வாடிப்பட்டியில் வாரச்சந்தை தொடங்கிய நிலையில் மும்முரமாக வியாபாரம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை தொடங்கியது- விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

    மதுரை மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் வாரச்சந்தை தொடங்கியதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வாடிப்பட்டி:

    கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் வாரச்சந்தை நடைபெற வில்லை. காய்கறி மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு விளையாட்டு மைதானங்களில் காய்கறி வியாபாரம் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து காய்கறி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்ட நிலையில் வாரச்சந்தையை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பிலும், விவசாயிகள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இதைத் தொடர்ந்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழகத்தில் வாரச்சந்தைகளை தொடங்க அனுமதி அளித்தது. இதனால் மதுரை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வாரச்சந்தை நடைபெற்றது.

    வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரம்பரியம் மிக்க தனியார் வாரச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் கூடும் இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி, காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 6 மாதங்களுக்கு பின்னர் நேற்று இந்த சந்தை செயல்பட்டது. அரசு வழிகாட்டுதலின்படி சந்தை நுழைவுவாயிலில் கிருமிநாசினி மற்றும் சோப்பால் கை கழுவிய பின்னர் முகக் கவசம் அணிந்து வந்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வரித்தண்டலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் வந்தனர். மேலும் முகக்கவசம் அணிவது, கை கழுவுதல், பாலிதீன் பயன்பாடு தடை உள்ளிட்டவை குறித்து ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பின் தொடங்கப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
    Next Story
    ×