search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக, அதிமுக, பாமக நிர்வாகிகள்
    X
    முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக, அதிமுக, பாமக நிர்வாகிகள்

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜக, அதிமுக, பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

    பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தி.மு.க.வில் இணைந்து இருக்கின்றனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பா.ஜ.க. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.சின்னசாமி தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    அதேபோல், பா.ம.க.வை சேர்ந்த மாநில மாணவர் அணி துணைத்தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான ஜி.நாகராஜ், ஒன்றிய முன்னாள் செயலாளர் பழனி, கார்த்திக், சேட்டு, தினேஷ், செந்தில், சிவா ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

    மேலும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் எல்லப்பன், ஊராட்சி செயலாளர் கதிர்வேல், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சின்னசாமி, பி.எஸ்.பி. கட்சியின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் மற்றும் காவேரிப்பட்டினம் ஒன்றியங்களில் இருந்து பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.செங்குட்டுவன், மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.கோவிந்தன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×