search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிசான் திட்ட மோசடி
    X
    கிசான் திட்ட மோசடி

    சேலம் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியில் இதுவரை ரூ. 4 கோடி மீட்பு

    சேலம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதவர்களை போலியாக சேர்த்து ரூ. 6 கோடி வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்போது வரை ரூ. 4 கோடி மீட்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதவர்களை போலியாக சேர்த்து ரூ. 6 கோடி வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்போது வரை ரூ. 4 கோடி மீட்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 5 வேளாண் அதிகாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாநிலத்தை சேர்ந்த 1264 கணக்குகளில் இருந்து 25 லட்சம் ரூபாயை விரைவில் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×