search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகில் உள்ள காட்ரோடு சோதனை சாவடியில் தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மயிலாடும்பாறை அருகில் உள்ள குமணன் தொழுவை சேர்ந்த கதிரேசன்(வயது 19), தமிழ்ச்செல்வன் (26) ஆகியோர் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×