search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    ஊரக வேலை திட்டத்தில் மோசடி- பண்ணவாடி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு

    ஊரக வேலை திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட பண்ணவாடி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் பண்ணவாடி ஊராட்சி செயலாளராக இருந்தவர் பிரபகாரன் (வயது 33).

    தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண்ணவாடி ஊராட்சி வரப்பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் தன் நிலத்தில் கல் வரப்பு அமைக்க கடந்த 2018- ஆண்டு பிரபாகரனை சந்தித்தார். அப்போது ஆதார் அட்டை நிலத்திற்கான கல்வி பட்டா பெற்ற அவர் கல் வரப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் செந்தில்குமார் ஆன்லைனில் ஆய்வு செய்தபோது அவர் நிலத்தில் 78 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பீட்டில் கல் வரப்பு அமைக்கப்பட்டதாகவும் அதற்கான தொகை ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பதிவு செய்யப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் சேலம் ஊரக திட்ட அலுவர்களிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தியபோது பிரபாகரன் இதேபோல பலர் உடைய நிலத்தில் கல்வரப்பு கட்டியதாக கூறி தனக்கு ஆதாரவான தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொளத்தூர் பி.டி.ஓ. முத்துசாமி, பிரபாகரனை சஸ்பெண்டு செய்தார். மேலும் தின்னப்பட்டி ஊராட்சி செயலாளர் மாரியப்பன், கூடுதல் பொறுப்பாக பண்ணவாடிக்கு நியமிக்கப்பட்டார். பிரபாகரன் இதுபோல மேலும் செய்த மோசடிகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×