search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு
    X
    கோவிஷீல்டு

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    உலகம் முழுவதையும் கொரோனா வைரசின் தாக்கம் ஸ்தம்பிக்க வைத்தது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு, தற்போது மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்கள் மீது சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவிலும் 16 நகரங்களில் இந்த மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்தது.

    தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ மருந்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துக்கான பரிசோதனை செய்வதற்கான பணி நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை ஐ.சி.எம்.ஆர்.க்கு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×