search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முன்னாள் கவுன்சிலர் வீட்டின் ஓட்டை பிரித்து 25 பவுன்- ரூ.3½ லட்சம் கொள்ளை

    பட்டுக்கோட்டை அருகே முன்னாள் கவுன்சிலர் வீட்டின் ஓட்டை பிரித்து 25 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மில்லடி பகுதியை சேர்ந்தவர் காத்தலிங்கம் (வயது63). ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர். இவர் தனது மனைவி புஷ்பவள்ளியுடன் அதே கிராமத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கி உள்ளார். காத்தலிங்கத்தின் மகன் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார்.

    தற்போது பாலகிருஷ்ணனின் மனைவி தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மட்டும் வீட்டு மாடியில் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள சமையல் அறையின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தஞ்சையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. தடயவியல் நிபுணர்களும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். கொள்ளை போன தங்க நகையின் மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் வீட்டில் கொள்ளை நடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×