search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயத்தில் திருடிய 3 பேர் கைது

    கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல்களில் பணம் திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில், சீனிவாசபுரம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பலியை முடித்து விட்டு ஆலயத்தை பூட்டி விட்டு நிர்வாகிகள் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது, ஆலயத்தில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுக்கள் காசிநாதன், சரவணக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்த னர். மேலும் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில், சால்வை அணிந்து வந்த வாலிபர் ஒருவர், ஜன்னல் வழியாக உள்ளே நுழைவது தெரியவந்தது.

    இதற்கிடையே அதேபகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சித்தையன்கோட்டையை சேர்ந்த கவுதம் (வயது 20), தேனி மாவட்டம் காமக்காபட்டியை சேர்ந்த முத்துக் குமார் (24) கெங்குவார்பட்டியை சேர்ந்த மாதவன் (20) என்றும், அவர்கள் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல்களில் பணம் திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உண்டியல்களில் இருந்த ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×