search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாண் மசோதா சட்ட நகலை கிழித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

    கோவையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    கோவை:

    வேளாண் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்றுமாலை நடந்தது. இதற்கு பொதுச்செயலாளர் முகமது இசாக் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராஜா உசேன் பேசும் போது, விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்பட 3 சட்டங்களை மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி உள்ளது. அதில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. எனவே விவசாயிகளை பாதிக்காது என்ற மத்திய அரசு கூறுவதை விவசாயிகள் நம்ப தயாராக இல்லை. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உணவு தானியங்கள் மற்றும் பல பொருட்கள் நீக்கப்படுவதால் பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றை தடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்த சட்டங்கள் நிறைவேற ஆதரவு அளித்த அ.தி.மு.க.வின் போக்கு கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல்கரீம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவூப் நிஸ்தார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரகீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்து போராட்டம் நடத்தினர். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×