search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சை, நாகை மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    திருத்துறைப்பூண்டி, கோவில்பட்டி, மதுக்கூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×