search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி அருகே மரம் முறிந்து டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    கோவில்பட்டி அருகே மரம் முறிந்து டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    கோவில்பட்டியில் பலத்த மழை- மரம் முறிந்து விழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்

    கோவில்பட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது, அங்குள்ள மரம் சரிந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து சேதம் அடைந்தது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டு முளைத்த நிலையில் உள்ள மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து போன்ற பயிர்கள் மழைநீர் சென்றது.

    மேலும் செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள பெரிய ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்த மரத்தை ராட்சத எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    பின்னர் சேதமடைந் டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியில் மின்தடை சரிசெய்யப்பட்டது. அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
    Next Story
    ×