search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.27 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை: 

    நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

    சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 76.40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 13 பைசா விலை குறைந்து, 76.27 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
    Next Story
    ×