search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு சந்தை
    X
    கோயம்பேடு சந்தை

    கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு திறப்பு

    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி மூடப்பட்ட நிலையில் சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு கோயம்பேடு சந்தை திறக்கப்படுகிறது. 

    காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்களின் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமி நாசினி வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது.
    Next Story
    ×