search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கை அமரன்
    X
    கங்கை அமரன்

    எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
    தஞ்சை:

    கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்நோயிலிருந்து குணமாகி, மாரடைப்பால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு நடிகர் அர்ஜுன் பேசும்போது, எஸ்.பி.பி.க்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் கூறியதாவது:

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×