search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ஆனந்த்
    X
    கலெக்டர் ஆனந்த்

    கொரோனா பரிசோதனை முடிவுகளை இனிவரும் நாட்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: கலெக்டர்

    கொரோனா பரிசோதனை முடிவுகளை இனிவரும் நாட்களில் பொதுமக்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அரசின் வழிமுறைகள் பின்பற்றாதவர்களுக்கு பொது சுகாதார விதிகள் பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை 91 ஆயிரத்து 572 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டது. இதில் 6 ஆயிரத்து 552 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 85 ஆயிரத்து 20 பேருக்கு தொற்று இல்லை. திருவாரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை இனிவரும் நாட்களில் பொதுமக்கள் http:/tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி பரிந்துரை படிவ அடையாள எண்ணினை மற்றும் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து தொடர்புடையவர்களின் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மருத்துவ மேல் சிகிச்சை மற்றும் வெளிநாடு செல்பவர்களுக்கு பரிசோதனை சான்றிதழ் தேவைப்படுபவர்கள் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×