search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் RT- PCR பரிசோதனை மட்டுமே- அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT- PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,  

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT- PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4 சதவீகித என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். கொரோனா மரண விகிதத்தை 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதத்தை 1.4 % இருந்து 1.2 %ஆக குறைத்துள்ளோம். கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை முதல்வர் அளித்துள்ளார். 

    கொரோனா தடுப்பு மருத்துவம் சாந்த பணிகளுக்கு ரூ- 1982 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுபபுப் பணிகளை பாராட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலிக்கு மனம் இல்லை. தமிழக அரசை பிரதமர் பாராட்டியதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
    Next Story
    ×