search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 22 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா சிகிச்சை

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 22 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மூலம் முகாம்களும் செயல்பட்டன.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 22 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மூலம் முகாம்களும் செயல்பட்டன.

    அங்கு தனிமைப்பட்டவர்களுக்கு மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் 7927 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

    முகாம்களில் 9574 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-

    கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையிலும் முகாம்களிலும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வீட்டு தனிமையில் 5246 பேர் வைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டனர். இதுவரையில் 22 ஆயிரத்து 746 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் 495 பேருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 466 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    292 பெண்கள் குழந்தை பெற்று சுகமுடன் வீடு திரும்பி உள்ளனர். இதில் 109 பெண்களுக்கு சுகப்பிரவம் நடந்துள்ளது.

    181 பெண்களுக்கு ஆபரே‌ஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா காலத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் தொடர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×