search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை சலூன் கடைக்காரர்
    X
    மதுரை சலூன் கடைக்காரர்

    பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் தலைமறைவு - கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு

    மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு வராமல் அவர் தலைமறைவாகி விட்டார்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர், ஆவின் நகரைச் சேர்ந்தவர் சேங்கைராஜன் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் மேலமடையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகனிடம் மருத்துவ செலவிற்காக ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த கடனுக்காக அவர் மோகனிடம் ரூ.48 ஆயிரம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனாலும் மோகன் கூடுதலாக வட்டி பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாக சேங்கைராஜன், அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார்.

    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தனது மகளின் படிப்பு செலவிற்காக வைத்திருந்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மோகன் வழங்கினார். இதனை அறிந்த பிரதமர் மோடி, மான் கீ பாத் நிகழ்ச்சியின்போது அவரையும், அவரது மகளையும் பாராட்டினார். இதனால் சமூக ஆர்வலர்கள் பலரும் மோகனை பாராட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில் மோகன் மீது கந்து வட்டி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×