search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    கைதி தப்பி ஓடிய சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் சஸ்பெண்டு

    தூத்துக்குடியில் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் 2 பேரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 22). இவரும், இவரது நண்பர்களான வேலாயுதபுரத்தை சேர்ந்த முத்துராஜ் (19), மாரி செல்வம் (20) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த புதியம்புத்துர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் சுடலை முத்து ஆகியோர் கடந்த 20-ந் தேதி போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக இரவு மீண்டும் பேரூரணிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    நள்ளிரவில் தட்டப்பாறை அருகே வந்து போது சாலையில் இருந்த வேகத்தடையில் ஜீப் ஏறி இறங்கிய போது மாயகிருஷ்ணன் ஜீப் கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடி இருட்டு பகுதிக்குள் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து தட்டபாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாயகிருஷ்ணனை வலைவீசி தேடி வந்தனர். 2 நாட்கள் தேடிய நிலையில் நேற்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பதுங்கி இருந்த மாயகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கைதியை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அஜாக்கிரதையாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் சுடலை முத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×