search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டதால் நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 3 ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி:

    தென்தமிழக கடற்கரை பகுதியையொட்டி உள்ள குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலை 3.3 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை உயர வாய்ப்பு உள்ளது.

    மேலும் கடல் நீரோட்டம் வினாடிக்கு 62 முதல் 88 சென்டி மீட்டர் வரை உயர வாய்ப்பு உள்ளது. கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடியில் 250 விசைப்படகுகளிலும், ஆயிரம் நாட்டுப்படகு களிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தடை உத்தரவு காரணமாக இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் நெல்லை மாவட்டத்தில் உவரி, கூடுதாழை, கூட்டாம்புளி, பெருமணல், இடிந்தகரை, உள்ளிட்ட கடற்கரை பகுதி களில் 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    Next Story
    ×