search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில்கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 15,027 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 18,420 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

    2,806 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,542 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 20 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 108 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் மல்லைநாயக்கன்பட்டியை 65 வயது மூதாட்டி, ஆயுதப்படை போலீஸ் பிரிவை சேர்ந்த 38 வயது நபர், பாலன்நகரை சேர்ந்த 69 வயது முதியவர், லட்சுமிநகரை சேர்ந்த 56 வயது நபர், கருப்பசாமி நகரை சேர்ந்த 35 வயது நபர், 49 வயது நபர், சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 55 வயது நபர், ஒண்டிப்புலியை சேர்ந்த 23 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த 58 வயது பெண், 67 வயது முதியவர், காரியாபட்டி, ஆத்திப்பட்டி, ஆனையூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்த 35 வயது பெண், 20 வயது நபர், மீனாட்சிபுரம், ஊத்துப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, தில்லைநகர், கீழசத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,027 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 656 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 2,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தாமதம் ஆகிறது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×