search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள்
    X
    கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள்

    மூடிக்கிடக்கும் கொள்முதல் நிலையங்கள் முன்பு குவியும் நெல்- அதிகாரிகள் கவனிப்பார்களா?

    சாலியமங்கலம் பகுதியில் மூடிக்கிடக்கும் கொள்முதல் நிலையங்கள் முன்பு நெல் குவிந்து வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாலியமங்கலம்:

    தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம், பச்சக்கோட்டை, திருபுவனம், பூண்டி, கோவிலூர், கோனூர், வாளமர்க்கோட்டை, புன்னைநல்லூர், மாரியம்மன்கோவில், அருள்மொழிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடையான நெல்லை விற்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    வியாபாரிகளிடம் குறைந்த விலையே கிடைப்பதால் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள விவசாயிகள் பலர் மூடிக்கிடக்கும் கொள்முதல் நிலையங்கள் முன்பு அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்து இரவு, பகலாக பாதுகாத்து வருகிறார்கள்.

    இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லுக்கு அவ்வப்போது பெய்யும் மழை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கோவிலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 2,000 நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதேபோல் அருள்மொழிப்பேட்டை, சாலியமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் நெல் தேங்கி கிடக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து கொள்முதல் நிலையங்களை விரைவில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×