search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம்
    X
    பணம்

    மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு வியாபாரிகள் ரூ.5.59 கோடி வாடகை பாக்கி

    மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கடை வியாபாரிகள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.5.59 கோடி வாடகை பாக்கியை 3 நாட்களில் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமாக 233 கடைகள் உள்ளன. இதில் பயன்பாட்டில் 133 கடைகளும், 100 கடைகள் மூடப்பட்டும் உள்ளது. நகராட்சி கட்டிடங்களில் வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நகராட்சி கடை வியாபாரிகள் நகராட்சிக்கு சுமார் ரூ.5 கோடியே 59 லட்சத்து 3 ஆயிரத்து 215 வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி பணியாளர்கள் உள்பட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறிவருகிறது. மேலும் மின்கட்டணம் உள்ளிட்ட பாக்கிகளை செலுத்த முடிய வில்லை. மேலும் வளர்ச்சி பணிகளும் தடைபட்டுள்ளது. எனவே நகராட்சி கடை வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 3 நாட்களில் வாடகைபாக்கியை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வியாபாரிகள் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×