
மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,777 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து, 126.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்இருப்பு 3,996 மில்லியன் கன அடியாக உள்ளது. அணை பகுதியில் 88.4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.