search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை
    X
    மாநிலங்களவை

    வேளாண் மசோதா தாக்கல், சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று உள்ளிட்ட தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகள்

    மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    சென்னை:

    இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:-


    விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்


    விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் இரண்டு வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மசோதாவை தாக்கல் செய்து பேசிய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும் என்றும் கூறினார்.

    விவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

    மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவால் விவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள் என திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

    கிராமத்திற்காக தனி ஆளாக கால்வாய் வெட்டிய முதியவருக்கு கிடைத்த பரிசு

    பீகார் மாநிலத்தில் தனி ஆளாக நின்று தனது கிராமத்திற்காக கால்வாய் வெட்டிய முதியவருக்கு மகிந்திரா நிறுவனம் டிராக்டரை பரிசாக வழங்கி உள்ளது.

    இந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு

    இந்தியாவில் நேற்று 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43.03 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 86,752 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு 1.61 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 79.68 சதவீதமாகவும் உள்ளது.

    கொரோனா பாதிப்பு: 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 23 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

    தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு

    தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.


    இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்?- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்


    ஆன்லைனில் நடத்தப்படும் இறுதி செமஸ்டர் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.



    சசிகலா விடுதலையால் எந்த அரசியல் மாற்றமும் வராது- தங்க தமிழ்ச்செல்வன்

    சசிகலா விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.


    சென்னையில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

    சென்னையில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.


    வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை


    அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

    அமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் -டிரம்ப் காட்டம்


    போராட்டக்காரர்கள் என்கிற போர்வையில் உள்ள ரவுடி கும்பல்கள் மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமாக கூறினார்.

    சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்

    சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும், வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 14- போட்டிகளில் பஞ்சாப் அணியும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

    கேப்டனாக ஒரே அணிக்கு 100 வெற்றி: எம்எஸ் டோனி சாதனை

    ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை எம்.எஸ். டோனி படைத்துள்ளார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்?”- நடிகை நமீதா பேட்டி

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகிய 4 பேரில் அரசியலில் பிரகாசிக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விக்கு நடிகை நமீதா மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.

    சிம்புவும் இல்ல... அருண்விஜய்யும் இல்ல - மாஸ்டர் பட பிரபலத்துடன் அடுத்த படத்தை தொடங்கிய மிஷ்கின்

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், அடுத்ததாக சிம்பு, அருண்விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    Next Story
    ×