search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    வரி ஏய்ப்பு செய்த செங்கல் சூளைகளுக்கு ரூ.9.5 கோடி அபராதம்- ஜிஎஸ்டி அதிகாரிகள் நடவடிக்கை

    வரி ஏய்ப்பு செய்த செங்கல் சூளைகளில் ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.5 கோடி உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை சின்ன தடாகம், சோமையாம்பானையம், கணுவாய், மாங்கரை, ஆனைகட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் இயங்கி வருகிறது.

    இதில் பெரும்பாலான சூளைகளில் சரக்கு, சேவை வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் செங்கல் சூளைகள், உரிமையாளர்களின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் போது அது தொடர்பாக முறையான கணக்குகளை கையாள்வது இல்லை என்பது தெரிய வந்தது.

    மேலும் ஒரே பெயரில் பல யூனிட்கள் இருப்பதும், ஒரு யூனிட்டிற்கு உரிமம் வாங்கி பல யூனிட்டுகளை நடத்தி வருவதும் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது.

    வரி ஏய்ப்பு செய்த செங்கல் சூளைகளில் ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 9.5 கோடி உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 190 செங்கல் சூளைகள் நடப்பாண்டில் ரூ.250 கோடி மோசடி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சோதனையில் ஜி.எஸ்.டி. மட்டுமல்லாமல் தொழில் வரி, சொத்து வரி உள்பட பல்வேறு வரிகளில் மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    Next Story
    ×