search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    திருப்பூரில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.கே.ஆர்.காலனி 4-வது வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சம்பவத்தன்று திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் அருகே நடந்துசென்றபோது மதுரை மாவட்டம் தத்தனேரி அருள்தாஸ் புரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 24) என்பவர் கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்றார்.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். செல்வத்தின் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் ஹரிஸ் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கும், தெற்கு போலீஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடியது தொடர்பாக 5 வழக்குகளும் உள்ளன.

    கொலை வழக்கு, இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி பொது அமைதிக்கும், பொதுமக்களும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    கோவை மத்திய சிறையில் உள்ள செல்வத்திடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 28 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு 9 மாதங்களில் 28 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×