search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    முக கவசம் அணியாமல் வந்த 316 பேருக்கு அபராதம்

    திருப்பூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 316 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் பொது இடத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் 18 பறக்கும் படை குழுவினர் நேற்று பல்வேறு பகுதியில் ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 359 கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து 32 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் முக கவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் 3 ஆயிரத்து 68 பேரை சோதனை செய்ததில் 316 பேர் முக கவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும் படைகள் மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ. 84 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலபகுதியில் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×