search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூரில் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    திருப்பூரில் தனியார் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் தனியார் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கேரள மாநிலம் பாலக்காடு படித்தாரா பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 52). இவருடைய மகள் ஹர்ஷா (21). இவர் கேரள மாநிலம் ஒட்டப்பாளையத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நர்சிங் பயிற்சிக்காக திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் தான்பயிற்சி பெற்று வந்த தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள பெண்கள் விடுதியில் தோழிகளுடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹர்ஷா தான் தங்கியிருந்த விடுதியின்ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனையின் தரப்பிலிருந்து ஹரிதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திருப்பூர் வந்தார்.

    பின்னர் அவர் இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் நேற்று முன்தினம் இரவு ஹர்ஷா தனக்கு தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது வயிற்று வலி அதிகமாக உள்ளதாக கூறியதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×