search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

    2020-21 ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் வேளாண் பணிக்கான மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல விவசாயிகள் காத்திருக்கின்றனர். விவசாயிகள் இலவச மின்சாரம் பெற சுயநிதி மின் இணைப்பு எனப்படும் ‘தட்கல்’ விரைவு திட்டம் மற்றும் சாதாரண மின் திட்டம் என இரு முறைகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய மிந்துறை அமைச்சர் தங்கமணி, “இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு திட்டம் மூலமாகவும், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மூலமாகவும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

    மேலும் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விண்ணப்பதாரா்கள் 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்க உள்ள திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி இத்திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×