search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு உணவு தானிய சந்தை நாளை திறப்பு

    கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை நாளை திறக்கப்பட உள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்து, கொரோனா தொற்று பரவியதால் மே 5-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

    இதற்கிடையே, சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
     
    இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும். செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி  திறக்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு தங்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×