search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாணவி மகா சுவேதா
    X
    திருப்பூர் மாணவி மகா சுவேதா

    குறும்படத்தில் நடித்த திருப்பூர் மாணவிக்கு விருது

    குறும்படத்தில் நடித்த திருப்பூர் மாணவி மகா சுவேதாவுக்கு கிரண்ட்மா டாய் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக உயரிய விருது வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    அமெரிக்காவில் உள்ள லாஸ் வெகாசில் சர்வதேச பிலிம் குறும்பட திருவிழா நடந்தது. இதில் 100 நாடுகளின் குறும்படங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் 12-வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளின் விருது பட்டியலில் திருப்பூர் மாணவி மகா சுவேதாவுக்கு கிரண்ட்மா டாய் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக உயரிய விருது வழங்கப்பட்டது. இது மாணவி பெறும் 2-வது விருது ஆகும்.

    கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற குறும்பட திருவிழாவில் ஆரோடு பரயும் என்ற படத்தில் நடித்தற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றது குறிப்பிட தக்கது.

    Next Story
    ×