search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா சிலைக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
    X
    அண்ணா சிலைக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    தென்காசி:

    செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தாா். அதனைதொடா்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, துணை செயலாளர் பூசைராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ஜாகிர்உசேன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    நகர சார்பில் செயலாளர் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சேக்தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, குற்றாலம் செயலாளர் எம்.கணேஷ் தாமோதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    சுரண்டை நகர தி.மு.க சார்பில் நடந்த விழாவுக்கு, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை ஆர்.கே.நகர் பகுதி திமுக செயலாளர் வக்கீல் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு தென்னங்கன்று, மண்வெட்டி, பால்கேன், அரிசி, மற்றும் பருப்பு வகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை பேரூர் கழக தே.மு.தி.க சார்பாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், சுரண்டை பேரூர் கழக செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பனவடலிசத்திரம் பகுதிகளான சண்முகநல்லூர், குருக்கள்பட்டி, மேலநீலிதநல்லூர், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி, மருக்காலங்குளம், மேல இலந்தைகுளம் ஆகிய ஊர்களில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அண்ணாவின் உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×