search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தொண்டர்கள் தயார் செய்த லட்டு
    X
    பாஜக தொண்டர்கள் தயார் செய்த லட்டு

    மோடி பிறந்த நாள்- காமாட்சி அம்மனுக்கு 70 கிலோ லட்டு படையல் செய்த கோவை பாஜக தொண்டர்கள்

    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி கோவையில் பாஜக தொண்டர்கள் 70 கிலோ லட்டு தயாரித்த காமாட்சி அம்மனுக்கு படையல் செய்தனர்.
    கோவை:

    பிரதமர் மோடியின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் கோவையில் பாஜக தொண்டர்கள் சார்பில், மோடியின் 70வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், 70 கிலோ எடையுள்ள லட்டு தயார் செய்யப்பட்டு, காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு நைவேத்யம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த லட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×