search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
    அருப்புக்கோட்டை:

    நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது.

    அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனையடுத்து மாணவி ஜோதிஸ்ரீ துர்கா மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அருப்புக்கோட்டையில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்தினருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.

    நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    ஆரம்பம் முதலே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வருடந்தோறும் மாணவர்களின் தற்கொலை நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இன்னும் 8 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பதால் மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். BAN NEET என்ற வாசகம் பொறித்த முகக்கவசம் அணிந்தவாறு உதயநிதி கூறினார்.
    Next Story
    ×