search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் கொரோனா பயம் இல்லாமல் நடமாடும் மக்கள்

    கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் குறைந்து வருகிறது. பஸ்களில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் கிராம மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை ஆகிய 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 பேரூராட்சிகள் 429 கிராம ஊராட்சிகள் உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் மேற் கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7ந் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    அதே வேளையில் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் குறைந்து வருகிறது. பஸ்களில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் கிராம மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது.

    அரசு தரப்பில் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் பொதுமக்கள் இந்த அறிவிப்பை அலட்சியப் போக்கில் எடுத்துக்கொண்டு முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றப்படாமலும் தொடர்ந்து இருந்து வருவது வேதனையை அளிக்கிறது.

    முக கவசம் அணிவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ராமநாதபுரம் நகர் மற்றும் உள்ளாட்சி பகுதியில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முக கவசம் அணியாமல் நடமாடுபவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து தலா 100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முககவசம் அணிந்திருப்பவர்களும் தாடைக்கு மட்டும் முககவசம் அணிந்து உலா வருகின்றனர். வாய் மற்றும் மூக்கை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வகையில் முககவசம் அணிய வேண்டிய நிலையில் தாடையை பாதுகாக்கும் வகையில் முககவசம் அணிகின்றவர்களே அதிகம் உள்ளனர்.

    இவ்வாறு முககவசம் அணிவதால் எந்தவித பலனும் இல்லை. அவ்வாறு தாடைக்கு முககவசம் அணிந்து செல்வோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக தொற்று பரவுவதுடன் அவர்களுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் எளிதாக தொற்று பரவிட கூடும் என்ற நிலை உள்ளது.

    ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் மக்கள் அதிகம் உள்ள போதிலும் அங்கு செல்லும் முன்னர் கைகளை துடைத்துக் கொள்ள அங்கு திரவம் வைக்கப்படுவது இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×