search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி
    X
    டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி

    அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி- அரசாணை வெளியீடு

    அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களே உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதலாக இடங்களை ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

    கல்லூரிக்கல்வி இயக்குனர், அரசு கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள காரணத்தால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    கல்லூரிக்கல்வி இயக்குனரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, 2020-2021-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.

    இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும் எனவும் அரசு உத்தரவிடுகிறது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×