search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் தொடர் கொள்ளை- டியூசன் ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

    கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட டியூசன் ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 42 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
    துடியலூர்:

    கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பது தொடர் கதையாக இருந்தது.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் இடையார்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கரூர் மாவட்டம் அரத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நந்தகுமாரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மனோஜ் (வயது 33), கரூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோருடன் கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், திருட்டு பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். இவர்கள் மனோஜ் தலைமையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நந்தகுமார் கொடுத்த தகவலின் பேரில், மனோஜை போலீசார் கைது செய்தனர். இதில் மனோஜ் எம்.ஏ ஆங்கிலம் மற்றும் பி.எட் படித்து விட்டு மாணவ-மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இவர்கள் மீது சேலம் மாவட்டத்தில் நடந்த 150 நகை வழிப்பறி கொள்ளை உள்பட கோவை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்ததுள்ளது. மேலும் 2 பேரிடம் இருந்து 42 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×