search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக- இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்: 12 பேர் மீது வழக்கு

    திருத்துறைப்பூண்டி அருகே அ.தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டியமூலை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராகவன்(வயது58). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ராயநல்லூர் கோட்டகத்தை சேர்ந்த மதன்ராஜ்(31). இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரான இவருக்கும் ராகவனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று ராகவனுக்கும், மதன்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் காயமடைந்த மதன்ராஜ், அன்பானந்தன்(54), ஜானகிராமன்(45), ரஞ்சித்(25), காந்தி(50), உள்ளிட்ட 7பேர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனனர். இதைப்போல அ.தி.மு.க.வை சேர்ந்த ராகவன்,அவருடைய சகோதரர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×