search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ரூ.74.69 கோடி செலவில் நவீன தரவு மையம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

    பெருங்குடி, தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், சென்னை, பெருங்குடி, தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாட்டிற்கான சைபர் பாதுகாப்பு கட்ட மைப்புத் திட்டத்தினை செயல்படுத்திடும் விதமாக, புதிய இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

    அம்மா அரசுத் துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது மாநில தரவு மையம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

    அதன்படி, சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    இத்தரவு மையம் 195 அடுக்குகளை கொண்டது. இப்புதிய மாநில தரவு மையம், தமிழ்நாடு அரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் தரவேற்றம் செய்து பயன்படுத்திட உதவும். மேலும், இணைய தள சேவைகளை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் அரசு துறைகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்திடவும் இந்த அதிநவீன மாநில தரவு மையம் நிறுவப்பட்டுள்ளது.

    தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு “தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்” 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

    அதன்படி, தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ள இணைய தளத்தை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×