search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதிய கல்வி கொள்கையை கைவிட வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

    புதிய கல்வி கொள்கையை கைவிட வலியுறுத்தி திருவாரூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர்கள் ஜாஹிர் உசேன், ஜோசப், மாவட்ட இணை செயலாளர் நூர்முகமது, மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, அனிபா, சலாவுதீன், ரசியாபாணு, இப்ராஹிம் சேட், மாவட்ட பொருளாளர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதசார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி மீது நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்தில் 75 லட்சம் மக்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு நீதி கேட்டும், சிறுபான்மை மக்களின் கல்வி வாய்ப்பினை பறிக்கும் புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். தண்டனை காலம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×