search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

    கொலை வழக்கில் வெளியே வந்த 4 பேர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் கான்வென்டில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி பேச்சிமுத்து என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த வள்ளிநாயகம்(வயது 30), சுடலைமணி(29), வெள்ளபாண்டி(30), சுடலைகண்ணு(30) ஆகிய 4 பேரை மத்திய போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் 4 பேரும் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இவர்களில் வள்ளிநாயகத்தின் மீது 16 வழக்குகளும், சுடலைமணி மீது 2 வழக்குகளும், வெள்ளபாண்டி மீது ஒரு வழக்கும், சுடலைகண்ணு மீது 2 வழக்கும் உள்ளன.

    4 பேரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்ததால் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர் மாநகரில் கடந்த 2019-ம் ஆண்டு 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×