search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    நீர்த்தேக்கங்களை குத்தகைக்கு விடும்போது உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- அமைச்சர் தகவல்

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு நீர்த்தேக்கங்கள மீன்பாசி குத்தகைக்கு விடும்போது உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலையை உயர்த்தி, கூட்டுறவு சங்க மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏதுவாக தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறே தமிழ் நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்பை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-21-ம் ஆண்டு எனது சட்டமன்ற உரையில், மீன் வளத்றையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகையில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்குள் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முதற்கட்டமாக மோர்தானா, கோமுகி, சின்னாறு, நாகாவதி,வாணியாறு, பாரூர், வெல்லிங்டன், வரட்டுப்பள்ளம், குண்டேரிப் பள்ளம், கருப்பாநதி, குண்டாறு மற்றும் சண்முகா நதி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 12 நீர்த்தேக்கங்கள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மீன்பாசி குத்தைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் குத்தகை வருவாயாக ரூ.2.49 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    இதன் மூலம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலை மேம்படுவதோடு நீர்த்தேக்கங்களை சார்ந்து வாழும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் பயனடைவர். உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு நீர்த்தேக்கங்கள மீன்பாசி குத்தகைக்கு விடும்போது உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×