
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பி.எம். கேர்ஸ் நிதிக்கு மார்ச் 26 முதல் 31 வரையிலான 5 நாளில் மட்டும் 3076 கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெருந்தன்மையுடைய இத்தகைய நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிடாமல் இருப்பது ஏன்?
ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதிக்கு மட்டும் இந்த கடமையில் இருந்து ஏன் விலக்கு?
இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.