search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஆர் பாலு
    X
    டிஆர் பாலு

    போட்டியின்றி தேர்வாகிறாரா டி.ஆர்.பாலு?

    திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியின்றி டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எவ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனு வாங்கப்போவதில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    திமுக பொருளாளர் பொறுப்புக்கு கனிமொழி, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.

    இதனால் திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியின்றி டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×