என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  கோவை விமானப்படை ஊழியர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விமானப்படை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  கோவை:

  கோவை வீரகேரளம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). இவர் விமானப்படையில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார்.

  சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளியில் இருந்து கோவை ரோட்டில் சென்றார்.அப்போது வடவள்ளி கருப்பராயன் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிஷ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் ரன்ஜித் (33). இவர் கோவையில் இருந்து கேரளாவிற்கு லாரியில் காய்கறி லோடு எடுத்து வருகிறார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கேரளாவில் இருந்து கோவை வந்த ரன்ஜித், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டதால் பாலக்காடு சாலையில் இருந்து சுந்தராபுரம் பகுதிக்கு வந்தார்.

  அங்கு போலீசார் லாரியை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் லாரியை நிறுத்த இடம் தேடி அதே பகுதியில் லாரியை நிறுத்திய போது சுந்தராபுரம் பொள்ளாச்சி சாலையை கடக்க முயன்ற போத்தனூர்ரை சேர்ந்த சரஸ்வதி (65) என்பவர் மீது மோதியது.

  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×