search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழக அரசு வெளியீடு

    வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் கோயிலில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-

     * தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது.

    * முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.

    * 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

    * நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×