search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 406 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஆம்புலன்ஸ்க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்தார்.



    Next Story
    ×