search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு கூட்டத்தில் வை.செல்வராஜ் பேசிய போது எடுத்தபடம்.
    X
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு கூட்டத்தில் வை.செல்வராஜ் பேசிய போது எடுத்தபடம்.

    பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி 2-ந்தேதி சாலை மறியல்- இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

    பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி வருகிற 2-ந்தேதி மன்னார்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
    மன்னார்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் பாப்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரவள்ளி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மாணவர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் வனிதாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

    2019-2020-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ரூ.201 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை அறிவிப்பில் மன்னார்குடி ஒன்றியத்தில் 31 வருவாய் கிராமங்கள் உள்பட திருவாரூரில் மாவட்டத்தில் உள்ள 68 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை விடுபட்டுள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கையினை கண்டித்தும், காப்பீடு செய்துள்ள அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஒன்றியம், நகரம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×